×

ஆண்டிபட்டியில் களைகட்டும் தர்ப்பூசணி வியாபாரம்

ஆண்டிபட்டி, மே 13: பருவநிலை மாற்றமும் தாறுமாறாக சீர்குலைந்துள்ளதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருக்கும். தற்போது காலை நேரங்களில் இதமான சூழலும், மதியத்திற்கு ேமல் வெயிலின் தாக்கமும் உள்ளது என மக்கள் கூறுகின்றனர். தேனி மாவட்டத்தில் தற்போது தர்பூசணி வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. தமிழ் மாதத்தில் பங்குனி மாதம் ஆரம்பிக்கும் கோடைகாலம் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதம் முழுமையாக நிறைவடைந்து ஆடி மாதம் வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கும். தற்சமயம் கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில் காணப்படுவதால், பொதுமக்கள் தர்ப்பூசணியை நாடி வருகின்றனர். தர்ப்பூசணி வடக்கு மாவட்டமான திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம் போன்ற இடங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

ஆண்டிபட்டியை சேர்ந்த தர்ப்பூசணி வியாபாரி ஒருவா் கூறுகையில், ‘‘பொதுவாக தர்ப்பூசணி அதிகளவில் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களில் விளைகிறது. 70 நாளில் பயனளிக்கூடிய இந்த தர்ப்பூசணி சொட்டு நீர் பாசனம் முறையிலும் கிணற்று பாசனம் முறையிலும் விளைவிக்கப்படுகிறது. மொத்தவிலையாக 12 க்கும் சில்லரை விற்பனைக்கு 15க்கும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 3 டன் அளவில் விற்பனை செய்கிறோம். அடுத்த மாதம் இன்னும் வியாபாரம் சூடுபிடிக்கும்’’ என்றார்.இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பருவநிலை மாற்றம் சீதோஷ்ண மாறுபாடுகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக தென்மேற்கு பருவ மழை (ஜூன் முதல் செப்., வரை) , வடகிழக்கு பருவ மழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) காலங்களில் அதிக மழை பெய்யும். விருதுநகரில் வடகிழக்கு பருவ காலத்தில் தான் அதிக அளவில் மழை பெய்யும். ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகவும், மார்ச் முதல் மே வரை கோடை காலமாகவும் உள்ளது. ஆனால் அண்மைகாலமாக இந்த சீதோஷ்ண நிலையில் மாறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்தாண்டு கோடைகாலத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. பனிப்பொழிவும் உள்ளது. தற்போதும் வெயிலின் தாக்கம் குறையாமல் அப்படியே உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்யுமா என்பது சந்தேகமாக உள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க தர்ப்பூசணி போன்ற பழங்கள் பயனுள்ளதாக உள்ளது.’’ என்றனர்.

The post ஆண்டிபட்டியில் களைகட்டும் தர்ப்பூசணி வியாபாரம் appeared first on Dinakaran.

Tags : Watermelon ,Antipatti ,Andipatti ,Tamil Nadu ,Agni Nakshatra ,Dinakaran ,
× RELATED ‘பிரிந்த உறவுகள் ஒன்று...